முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை (Prevention of Terrorism Act) நீக்க வேண்டும் எனவும் முன்னாள் போராளிகளை
புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை கிழக்கு மாகாண பெண் மனித உரிமைகள் அமைப்பினை சேர்ந்த பெண் மனித
உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் (Trincomalee) இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டனர்.

பயங்கரவாத தடைச் சட்டம்

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அரசு ஒப்புதல் அளித்து
ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயம் இதனை சட்ட மூலமாக உருவாக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Govt Should Repeal The Prevention Of Terrorism Act

வடகிழக்கில்
பெண் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக பாரிய அச்சுறுத்தல்களை
சந்திக்கின்றனர். பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

உடல்
உள பாலியல், இணைய வன்முறை என பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதனை
நிறுத்தி கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்துக்கு கோரிக்கை

குறிப்பாக பெண் மனித
உரிமை செயற்பாட்டாளரான நவரத்னம் அஞ்சலி தேவி (வயது 61) கடந்த டிசம்பர் 04ம்
திகதி பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை போன்றவற்றை உடன் நிறுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Govt Should Repeal The Prevention Of Terrorism Act

அத்துடன் டிசம்பர் 11ம் திகதி 11 வயது சிறுமியை பாலியல்
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நபருக்கு எதிரான தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தி இவ்வாறான தீர்ப்புக்கள் வரவேற்கத்தக்கது
இதனை வலியுறுத்தியே அரசாங்கத்துக்கு கோரிக்கையாக முன்வைக்கிறோம்“ என தெரிவித்தனர்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்