அரசாங்கத்தால் மகிந்த, மற்றும் ரணிலின் முடியை கூட தொட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Samapth Dassanayake )தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மகிந்த ராஜபக்ச அல்லது ரணில் விக்ரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் கைது செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர்
“பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே பிடிப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க மேலும் கூறினார்.

பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானது என்றும் இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே தொடர்ந்து கூறி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

