யாழ்ப்பாணத்தில் (Jaffna) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை இன்று (29) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பென்டிரைவ் ஒன்றை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த கிராம
சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
கிராம சேவையாளர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு
ஆணைக்குழுவிற்கு (CIABOC) முறைப்பாடு கிடைக்கப்பெற்றதற்கு அமைய அவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

