பண்டிகைக்காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள் மற்றும் கடுமையான மருத்துவ நிலைமைகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






































































































