மஹியங்கனைப் பிரதேச குளமொன்றில் மீன்பிடிக்கச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கி துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை மாபாகடவெவ பிரதேசத்தில் உள்ள குளத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கி கண்டெடுப்பு
அங்குள்ள ஒருவர் குளத்தில் கட்டியிருந்த வலையில் சிக்கிய நிலையில் T-56 ரக துப்பாக்கியொன்றைக் கண்டெடுத்துள்ளார்.
அதுகுறித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ஓரளவுக்கு துருப்பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

