முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியவர் அமெரிக்காவில் அதிரடி கைது

இஸ்ரேல் (Israel) மீதான தாக்குதலில் ஹமாஸை (Hamas) வழிநடத்தியவர் என அமெரிக்காவில் (United States) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க விசாரணைக் குழு குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

விசாரணைக் குழு 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மஹ்மூத் அமீன் என்பவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியவர் அமெரிக்காவில் அதிரடி கைது | Hamas Operative Mahmoud Ameen Arrested In Us

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தாக்குதலின் போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தலை விசாரிக்க அலெக்ஸாண்ட்ரியா எம்.தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஹமாஸின் தாக்குதல்

இந்த நிலையில், 2023 அக்டோபர் ஏழாம் திகதியில் இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலின் போது, ஹமாஸ் படையில் இருந்த மஹ்மூத், அமெரிக்காவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியவர் அமெரிக்காவில் அதிரடி கைது | Hamas Operative Mahmoud Ameen Arrested In Us

அத்தோடு, அமெரிக்காவில் விசா பெற பொய்கூறி, சட்டவிரோதச் செயலிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்காவின் விசா விண்ணப்பத்தில் தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் நிரந்தர குடியிருப்பாளர் என்றும் மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார்.

சதித் திட்டம்

இதன் மூலம், அவர் அமெரிக்க விசா பெறுவதிலும் மோசடி செய்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியவர் அமெரிக்காவில் அதிரடி கைது | Hamas Operative Mahmoud Ameen Arrested In Us

இந்த நிலையில்தான், விசா மோசடி மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்க சதித் திட்டம் தீட்டியதாக மஹ்மூத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுமட்டுமன்றி, அவரது பெயர் மற்றும் வயதிலேயே மற்றொருவர் இருப்பதாகவும் மற்றும் அவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்