யாழில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டமை தொடர்பிலான சந்தேகத்தின்
பேரில் வேலணை துறையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் வேலணை துறையூர் பகுதியில் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.
கடைக்கு சென்ற சிறுமி
கடந்த சனிக்கிழமை (19) அன்று குறித்த சிறுமி துறையூர் கடற்றொழில்
சங்கத்திற்கு அயலில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
கடையின் உரிமையாளரான 62 வயது மதிக்கத்தக்க நபர் குறித்த சிறுமியை கடையின்
உள்ளே அழைத்து குளிரூட்டியினுள் இருக்கும் குளிர்பானத்தை எடுக்குமாறு கூறியுள்ளார்.
இதன்போது குறித்த கடையின் உரிமையாளரான சந்தேகநபர்
சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்டுள்ளார்.
முறைப்பாடு பதிவு
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கடந்த 23ஆம் திகதியன்று தனது பகுதி கிராமசேவகருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து 24ஆம்
திகதியன்று வேலணை பிரதேச செயலகத்திலுள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் அன்றையதினமே
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார்
தெரிவித்ததுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.