ஹட்டன் (Hatton) கொழும்பு (Colombo) பிரதான வீதியில் வான் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேன (Ginigathhena) காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டியில் (Kandy) இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மற்றும் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வான் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: சரித் அசலங்க விளக்கம்
மேலதிக விசாரணை
இந்த நிலையில், குறித்த விபத்தில் வானில் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, பேருந்துக்கும் வானுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு குறித்த விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் கினிகத்தேன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண் நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |