முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்

2025 வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால் 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

கிண்ணியா 

இந்தநிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் துணை வைத்திய நிபுணர்கள் (Paramedical) அடையாள
வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (18) ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டு, ஏமாற்றத்துடன்
வீடு சென்றதை அவதானிக்க முடிந்தது.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் | Health Care Workers Struggle For Salary Increases

மாதாந்த கிளினிக்காக வந்த, நீரிழிவு நோயாளர்கள் மருந்துகள் எதுவும்
வழங்கப்படாமையினால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.

அதேபோன்று வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும், மருந்துகள்
இன்றி, வீடு சென்றனர்.

விடுதியில் இருந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களுக்கும் மருந்துகள்
வழங்கப்படவில்லை. அதனால், அவர்களும் ஏமாற்றத்துடன் வீடு காணக்கூடியதாக
இருந்தது.

கிளிநொச்சி

இன்றைய தினம் நாடுபூராகவும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் | Health Care Workers Struggle For Salary Increases

நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும்
தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வைத்தியர்கள், தாதியர்கள், உள்ளிட்டோர் சேவையிலீடுபடுகின்ற போதிலும்
மருந்தாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடமைக்குச் சமூகம் கொடுக்காதினால்
நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் | Health Care Workers Struggle For Salary Increases

எனினும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் நலன் கருதி வைத்தியசாலை
நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்