Courtesy: Chandana
களுத்துறை(Kalutara) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
களுத்துறை தேசிய சுகாதார நிறுவகம் மற்றும் பேருவளை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று(2) களுத்துறை, கட்டுகுருந்த போன்ற பிரதேசங்களில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களை இவ்வாறு சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கடலில் ஏற்பட்ட பதற்றத்தால் இலங்கைக்கு கிடைத்த நன்மை
சுகாதார சீர்கேடு
உணவகங்களின் சுகாதார சீர்கேட்டை பராமரிக்காத உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சந்தையில் காலாவதியான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த ஐந்து கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி முப்பதுக்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டதுடன், தொடர்ந்தும் இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார நிறுவகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்
இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |