முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுகாதாரத்துறை பணியாளர்கள் வாகனங்கள் வாங்குவதற்கு அனுமதி

குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு தாதியர் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுக்கு 4,441 உந்துருளிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு, உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்துடன் நிதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் யோசனை

தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் முகாமைத்துவம், முதியோர்களுக்கான பராமரிப்பு உதவிகள், சமூக மட்டச் சேவைகளைப் பலப்படுத்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய அவசர சுகாதார நிலைமைகளுக்கு மீட்சி திறனைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில்,  இந்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சுகாதாரத்துறை பணியாளர்கள் வாகனங்கள் வாங்குவதற்கு அனுமதி | Healthcare Workers Allowed To Purchase Vehicles

2024 தொடக்கம் 2028 வரையான காலப்பகுதியில் இலங்கையில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் குறித்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

களநிலைப் பணியாளர்களுக்கான (குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு தாதியர் மற்றும் கண்காணிப்புக் குழு) போதியளவு போக்குவரத்து இன்மையால் இக்கருத்திட்டத்தில் அடையாளங் காணப்பட்ட தீர்மானமிக்க தடையாக அமையும்.

அதனால், வீட்டு மட்டத்திலான பராமரிப்பு மற்றும் சமூகத் தொடர்புகளை விரிவாக்கம் செய்தல், களநிலை ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்தல், சிகிச்சைக் கழிவுகளைப் பாதுகாப்பாகவும் சரியான நேரத்தில் ஏற்றிச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கான போக்குவரத்து இயலுமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வாகனங்களை கீழ்க்காணும் வகையில் பெறுகை செய்வதற்காக  யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.