முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரின் பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட்  (Daisy Forest) ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்ரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் (Colombo High Court) இன்று (11) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றில் முன்னிலை

இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். 

மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Hearing Of Case Against Mahinda S Son Yoshitha

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நீதிபதி விடுமுறையில் உள்ளதால் இந்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 73 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்