முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்பு

நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை  உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இன்று (04) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் தேர்தல் திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான பெரும்பாலான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட மனு

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அமைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் (H.M Priyantha Herath) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Hearing On The Petition Sl General Election Date

ஜனாதிபதிக்காக சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.    

முதலாம் இணைப்பு 

இலங்கையின் பொதுத்தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றில் இன்றைய தினம் (04) விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த அடிப்படை உரிமை மனு சிவில் அமைப்பு ஒன்றினால் உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி

அத்துடன் பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Hearing On The Petition Sl General Election Date

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) சார்பாகச் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளது.

அதன்படி, பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்திருந்திருந்தது.

இலங்கையின் பொதுத்தேர்தல் எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.