கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதி கரடிபோக்கு சந்தியை அண்மித்தபகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வாகன சாரதி பயிற்சி வழங்கி கொண்டிருந்த முச்சக்கரவண்டியை
பின்பகுதியாக வந்த கனரக வாகனம் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் முச்சக்கரவண்டியில் சாரதி பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில் பயிற்சி
பெற்ற மாணவன் சிறு காயங்கள் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பிரதேச வீதி
பாடசாலை மாணவர்களின் நலன்
கருதி பாடசாலை செல்லும் மற்றும் விடும் நேரங்களில் குறித்தொதுக்கப்பட்ட
பிரதேச வீதியில் கனரக வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நேரத்தில் கனரக வாகனம் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

