சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெறும் ஊழல்களுக்கு தடையாக இருப்பதன் காரணத்தினாலேயே அவருக்கான எதிர்ப்புகள் அதிகரித்தாக பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களுக்கு வருவாய் குறைந்து காணப்படுகின்றமையினால் அதனை வேறு பிழையான வழிகளில் ஈட்டி கொள்வதற்காக வைத்தியசாலையை பலியாக்கி நோயாளர்களையும் சிரமத்திற்கு உட்படுத்துவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள் என ஆய்வாளர் வேல் தர்மா கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையை அவதானிக்கும் போது இந்த சமுதாயம் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,