ஹோமாகம(homagama), மாகம்மனையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து, முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்தை ஏற்பாடு செய்த ஆறு இளைஞர்கள் இன்று(12) கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த இளைஞர்கள் குஷ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள், போதைப்பொருள் முத்திரைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிக்கு கிடைத்த தகவல்
கஹதுடுவ காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் ராஜித குருசிங்கவுக்கு, சொகுசு வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் குழு ஒன்று போதைப்பொருள் விருந்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது இரண்டு இளம் பெண்கள் உட்பட எட்டு இளைஞர்கள் வீட்டில் இருந்ததாகவும், போதைப்பொருள் வைத்திருந்த ஆறு இளைஞர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.