முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்…! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

புதிய இணைப்பு

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை உள்நாட்டு அறுவடைகளிலிருந்து வழங்க முடியும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் எந்தவித சிரமத்தையும் சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்

முதலாம் இணைப்பு

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக நடைமுறைப்படுத்தாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Hotel Food Prices Will Increase With In Two Weeks

குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் எவரும் கட்டுப்பாட்டு விலைக்கு அமைய அரிசியை விற்பனை செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி வகைகளை கட்டுப்பாட்டு விலை

அந்த வகையில் சம்பா மற்றும் கீரிச் சம்பா ஆகிய அரிசி வகைகளை கட்டுப்பாட்டு விலைக்கு பெறுவது கடினமாக
இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Hotel Food Prices Will Increase With In Two Weeks

ஆகவே அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை சந்தையில் முறையாக நடைமுறைப்படுத்தாவிடின் எதிர்வரும் ஓரிரு வாரத்தில் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால்மாவின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விலையேற்றத்துக்கு அமையவே ஹெட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் தீர்மானிக்கபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை

இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) வெளியிட்டுள்ளது.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Hotel Food Prices Will Increase With In Two Weeks

இந்த வாரம் வெளியிட்ட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

அதன்படி, 1 கிலோ கிராம் கோதுமை மா 145 ரூபா 170 ரூபா வரையும், வெள்ளை சீனி 218 ரூபா முதல் 240 ரூபா வரையும், பருப்பு 260 முதல் 283 வரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 140 ரூபா 193 ரூபா வரையும், இந்திய வெங்காயம் 140 ரூபா 174 ரூபா வரையும், பாகிஸ்தான் வெங்காயம் 100 ரூபா 135 ரூபா வரையும் மதிப்பிடப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.