புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல். ஏ விமலரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது
ராஜபக்ச குடும்பத்துக்கு சொந்தமான கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே எல். ஏ விமலரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.


