கடந்த ஏழு மாத காலத்தினுள் இலங்கைக்கு 15 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கடந்த ஏழு மாத காலத்தினுள் 15 லட்சத்தி 656 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இதற்கு மேலதிகமாக இம்மாதத்தின் கடந்த 18 நாட்களுக்குள் மட்டும் ஒரு லட்சத்தி 32 ஆயிரத்து 368 பேர் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜேர்மன் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தே கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.