பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும் முகத்தை பளபளப்பாக வைப்பதிலும் அதிக நாட்டம் காட்டுவர்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில் வீட்டிலிருந்தபடியே முகம் பளபளப்பாக மாற இந்த ஒரு பேஸ்பேக் போதும்….
தேவையான பொருட்கள்

அரிசி கழுவிய நீர் – 2 ஸ்பூன்
கற்றாழை – 1 ஸ்பூன்
கிளிசரின் – 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றவும்.
பின் அதனுடன் சிறிதளவு கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நீண்ட நேரம் கலக்கவும்.

அடுத்து இதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இரவில் படுக்கும் போது இதை முகத்தில் தடவி வந்தால் முகம் வேகமாக வெள்ளையாக மாறும்.

