முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எரிபொருள் நிலையங்களில் இரவு நேரத்தில் பாரிய வாகன வரிசை

புதிய இணைப்பு 

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும், கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே இன்று நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இது எரிபொருள் கிடைப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் நிலையங்களில் இரவு நேரத்தில் பாரிய வாகன வரிசை | Huge Queues Of Vehicles At Fuel Stations

1,400 எரிபொருள் நிரப்பு நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம், தள்ளுபடி விகிதங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்றிரவு முதல் புதிய எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கடனில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தவும் சங்கம் முடிவு செய்துள்ளது.

விநியோகஸ்தர்களுக்கான 3வீத தள்ளுபடியை நிறுத்தி வைப்பதற்கான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது எரிபொருள் நிலைய இயக்குநர்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் கூறுகிறது.

நுகர்வோருக்கு ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகமே பொறுப்பாகும் என்றும், நெருக்கடிக்கு அவர்களின் முடிவுகளே காரணம் என்றும் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதால், விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. 

முதலாம் இணைப்பு 

எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன. 

பாரிய வாகன வரிசை

இன்று நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

எரிபொருள் நிலையங்களில் இரவு நேரத்தில் பாரிய வாகன வரிசை | Huge Queues Of Vehicles At Fuel Stations

இந்நிலையில், எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகளில் நின்று கொண்டுள்ளனர். 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.