டித்வா சூறாவளியை அடுத்து, மலைப்பகுதி மாவட்டங்களின் அபாயகரமான பகுதிகளில் மனித குடியிருப்புகளை உருவாக்குவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேரழிவுக்கு முன்னர் ஆபத்து மண்டலங்களின் வரைபடத்தின்படி, பதுளை மாவட்டத்தின் நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை கனமழை ஏற்பட்டால் மண்சரிவு ஏற்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிலப்பரப்பில் 50 சதவீதம் வரை
சமீபத்திய பேரழிவைத் தொடர்ந்து ஆபத்தான பகுதிகளை மதிப்பிடுவதற்கு புதிய வரைபடம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.

தற்போதைய நிலையை நாம் மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப வரைபடத்தைப் புதுப்பிக்க வேண்டும். சுமார் 100க்கும் மேற்பட்ட பெரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, நிலப்பரப்பு மாற்றப்பட்டுள்ளது. எனவே, நமது வரைபடங்களை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப புதுப்பிக்க வேண்டியிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
ஆபத்தான பகுதிகளில் கட்டிடங்களை
கணிசமான எண்ணிக்கையிலான மக்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்ற வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவுகள் ஏற்பட்ட சில இடங்களில், மனித குடியிருப்புகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை இயற்ற வேண்டியதன் அவசியம் குறித்து கேட்டதற்கு, “சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் உள்ளன, ஆனால் அவை கண்டிப்பாக நடைமுறைப்டுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இனிமேல் ஆபத்தான பகுதிகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பதில், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் ஒப்புதல் கண்டிப்பாக தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

