Courtesy: H A Roshan
திருகோணமலை, பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகத்தில் தொழிலுக்காக வெளிநாடு செல்லவுள்ள பொதுமக்களுக்கான ஆட்கடத்தல் மற்றும் மனித வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கானது பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (11.09.2024) நடைபெற்றுள்ளது.
விழிப்புணர்வு கருத்தரங்கு
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கானது தேசிய கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் மேற்பார்வையின் கீழ் IOM மற்றும் AMCOR நிறுவனத்தால் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், வளவாளராக AMCOR நிறுவன உத்தியோகத்தர், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்து கொண்டுள்ளனர்.