முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மடக்கி பிடிப்பு

புதுக்குடியிருப்பில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 100க்கும் அதிகமான மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசசபையினர் பொலிஸாரின் உதவியுடன் ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, மந்துவில், சிவநகர், கோம்பாவில், கைவேலி ஆகிய பிரதேசங்களில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும்
நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள்

இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் செயலாளர்
ச.கிருசாந்தன் கூறும் போது, வெறுமனே எம்மால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினால் மாத்திரம் தீர்வு பெற்றுவிட முடியும் என்பது சாத்தியமற்ற
ஒன்று.

புதுக்குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மடக்கி பிடிப்பு | Hundred Cattle Were Trapped In Puthukkudiyiruppu

கால்நடைகளின் உரிமையாளர்களிற்கு நிச்சயமாக ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். சபைக்கான வருமான மீட்டலினை பிரதானமாக கொண்டு இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதில்லை. எமக்கான சமூக பொறுப்பின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு உப அலுவலக பிரிவில் 100 இற்கு மேற்பட்ட கால்நடைகள் சபைக்கு
கொண்டு வரப்பட்டுள்ளது.

பணம் அறவீடு

பிடிபட்ட கால்நடைகளுக்கு, கால்நடை வைத்திய அலுவலகங்களினூடாக அன்றையதினமே
காதுப்பட்டி அணிவித்து தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துபவர்களிற்கு மட்டுமே
குறித்த கால்நடைகள் வழமையாக நடைமுறைகளில் பிரகாரம் கையளிக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மடக்கி பிடிப்பு | Hundred Cattle Were Trapped In Puthukkudiyiruppu

ஒட்டுசுட்டான் உப அலுவலக பிரிவில் வீதிகளில் கால்நடைகள் மிக குறைந்த அளவில்
காணப்பட்டன. அவை அங்கிருந்து சபைக்கு வரும் வழியில் வேலிகள் அற்ற தனியார்
காணிகளினூடாக தப்பி சென்றுவிட்டன.

பெரிய மாடு 3000 ரூபாவும், சிறிய மாடு 1000 ரூபாவும், மீளவும் அதே கால்நடைகள்
பிடிபடுமிடத்து 5000 ரூபா நாள் ஒன்றுக்கான பராமரிப்பு கூலி 500 ரூபா விகிதம்
அறவிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.