Courtesy: Sivaa Mayuri
2024 ஒக்டோபர் 11 முதல் நவம்பர் 11 வரையிலான மாதத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியாக தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக மொத்தம் 490 முறைப்பாடுகளை, தேசிய தேர்தல் ஆணையகம் (Election Commission) பெற்றுள்ளது.
இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையகம், தகவல் அறிந்ததும் சமூக ஊடக நிறுவனங்கள் 184 முறைப்பாடுகள் தொடர்பான, தமது இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
தவறான தகவல்கள்
இந்தநிலையில், 219 முறைப்பாடுகள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
வெறுப்பு பேச்சு, இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள், தேர்தல் பிரசாரத்திற்கு சிறுவர்களை பயன்படுத்துதல் மற்றும் தவறான தகவல்கள் தொடர்பான உள்ளடக்கம் மீதான முறைப்பாடுகளே தமக்கு கிடைத்ததாக தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.