முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சரணடைந்த கணவன் – வவுனியாவில் கொடூரம்

வவுனியாவில் (Vavuniya) இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன் மனைவியின் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் இன்று (03.06.2025) காலை வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

கொலை செய்யப்பட்டவர் 32 வயதான ரஜூட் சுவர்ணலதா எனவும் அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப முரண்பாடு காரணம்

காவல் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சரணடைந்த கணவன் - வவுனியாவில் கொடூரம் | Husband Murder Wife In Vavuniya

கொலை செய்த மனைவின் உடலை காட்டுப் பகுதியில் வீசியுள்ளதாக கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில், பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. 

மேலதிக விசாரணை

இந்த நிலையில் இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும்,மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர். இதன்போதே கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவர் சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சரணடைந்த கணவன் - வவுனியாவில் கொடூரம் | Husband Murder Wife In Vavuniya

புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். 

கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like this

https://www.youtube.com/embed/nCQ84e8S6qo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.