முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இதுவே எங்களின் எதிர்பார்ப்பு: புதிய ஜனாதிபதி வெளிப்படை

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க மக்கள் ஆணை கிடைத்துள்ளதாகவும் நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று (22) இரவு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக் கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

அரசியல் கலாசாரம்

எனக்கு ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைத்து பிரஜைகளையும் இலங்கையர் என்ற அடிப்படையில் பேதமற்ற வகையில் ஒன்றிணைத்து செயற்படுவேன் .

இதுவே எங்களின் எதிர்பார்ப்பு: புதிய ஜனாதிபதி வெளிப்படை | I Will Lead A Peaceful Regime President Anura

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க மக்கள் ஆணை கிடைத்துள்ளது. நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தும்மாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்காக முக்கிய பங்காற்றிய தேர்தல் ஆணைகுழுவுக்கு நன்றிகள்.

நெருக்கடிக்கு தீர்வு

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளோம். இந்த நெருக்கடிக்கு தீர்வை வழங்க மக்களின் ஆணையுடன் ஆட்சியமைக்க வேண்டி இருந்தது. அந்த மக்கள் ஆணை தற்போது கிடைத்துள்ளது.

இதுவே எங்களின் எதிர்பார்ப்பு: புதிய ஜனாதிபதி வெளிப்படை | I Will Lead A Peaceful Regime President Anura

வன்முறை அற்ற தேர்தலை நடத்த கிடைத்தமையும் எமது வெற்றியாகும். தேர்தல் நடத்தும் முறையும், தேர்தல் வெற்றியை கொண்டாடும் கலாசாரமும் மாற்றமடைய வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் அவ்வாறான வன்முறைகள் இடம்பெற கூடாது. அதற்காக எங்களின் ஒத்துழைப்பை நாங்கள் வழங்க வேண்டும்.

எம்மிடம் பாகுபாடு இருக்க கூடாது.

மக்களின் எதிர்காலத்துக்காக சகல கட்சிகளுடன் இணக்கத்துடன் கலந்துரையாடி முன்னோக்கி செல்ல எதிர்பார்க்கிறோம்.

என்னை ஆதரித்த மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் சகலரையும் தாய்நாட்டு மக்களாக மதித்து ஆட்சி புரிவேன் என புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/39rtIEx1N4c

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.