ஐபிசி தமிழ் தயாரிப்பில் உருவான் “பொம்மை“ முழுநீள திரைப்பட வெளியீடு பாரிஸில் நடைபெறவுள்ளதாக பிரான்ஸ், இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 26.10.2025 அன்று மாலை 4.00 மணியளவில் பொம்மை திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”எங்கள் தேசத்தின் உண்மை நிலையை சமரசமின்றி வெளிப்படுத்திய திரைக்காவியமான “பொம்மை” திரைப்படத்தை இனிய பெருமிதத்துடன் பிரான்சில் முதன்முறையாக வெளியிடுகின்றது.
திரைக்கலைப் படைப்பு
இந்தப்படம் வெறும் திரைக்கலைப் படைப்பு அல்ல.
அது நம்மை நிமிரவைக்கும் ஒரு குரல்,
நம்மை நெஞ்சுக்குள் சிந்திக்க வைக்கும் ஒரு ஒளி.
ஒரு மணி முப்பது நிமிடங்களுக்குள்,
எங்கள் நிலத்தின் வெளித்தெரியாத வில்லங்கள்,
நாம் காணாத உண்மைகள் அனைத்தையும் புட்டுவைத்து,
“நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை நெஞ்சுக்குள் விதைக்கிறது.
“பொம்மை” ஒரு கலைப்படைப்பு மட்டுமல்ல, நாம் கடந்து வந்த துயரங்களையும்,
நாம் இன்னும் கடக்க வேண்டிய வழியையும் தெளிவாகக் காட்டும் ஒரு சிந்தனையின் மருந்து.
இந்த வெளியீட்டின் முழு வருமானமும் எங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செலவிடப்படும்
என்பதை இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் உறுதியாக அறிவிக்கின்றது. வருக, சிந்தனையில் ஒன்றாகி செயலில் நின்று,
எங்கள் தேசத்தை மீட்டெடுப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.