நாட்டில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு ஐபிசி தமிழ் உறவுபாலம் திட்டத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், ஆரம்பக்க கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மலையகத்தில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணங்கள்
இதனடிப்யைில், நேற்று (25) பதுளை திக்வெல்ல பிரதேச மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தொடக்கம் பாதிக்கப்பட்டோருக்கான உலர் உணவு பொதிகள் வரையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








