முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முத்து நகர் சோளர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத கிரவல் அகழ்வு பணியை நிறுத்திய பிரதியமைச்சர்

முத்து நகர் சோளர் பகுதிக்கு தாரை வார்க்கப்பட்ட விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத கிரவல் அகழ்வு பணியை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தடுத்து நிறுத்தியுள்ளார்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயல பிரிவில் உள்ள முத்து நகர்
பகுதியின் விவசாய நிலம் அண்மையில் தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி
உற்பத்திக்காக வழங்கப்பட்ட நிலையில் அப் பகுதியில் சட்ட விரோத கிரவல் மண்
அகழ்வு இடம் பெற்று வருகின்றது.

இவ் விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் நேற்று  (18) அந்தப் பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை
மேற்கொண்டு மண் அகழ்வை தற்காலிகமாக நிறுத்தினார்.

கிரவல் அகழ்வு பணி

இதன் பின் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், இந்தப்  பகுதியில் அண்மையில் சட்ட விரோதமாக மண்
அகழ்வு இடம் பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில்
பொலிஸாருக்கு அறிவித்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.

பல வருடங்களாக இம்
மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கு விவசாயம் செய்வதற்கான
உரிமையும் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முத்து நகர் சோளர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத கிரவல் அகழ்வு பணியை நிறுத்திய பிரதியமைச்சர் | Illegal Excavation Of Soil In Trinco

பல வருடங்களாக
விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தற்போது நிறுவனங்களுக்கு ஒப்பந்த
அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த சில இடங்களில் வேலை திட்டங்கள்
நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுத்த
தீர்மானங்களின் பிரகாரம் நாங்கள் நிறுவனங்கள் வேலைத் திட்டங்களை ஆரம்பிக்காத
பிரதேசங்களில் விவசாய செய்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரைகளை
விடுத்திருந்தோம்.

கோரிக்கை

சரியான முறையில் ஆராய்ந்து பிரதேச செயலாளர் மூலமாக
வேண்டுகோளை விடுக்கின்றோம்.

மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் இங்கிருக்கின்ற
பல்வேறு பட்ட சட்டச் சிக்கல்களாககோ அடிப்படை உரிமைகளாகவோ இருக்கலாம் இதனை
சரியான வகையில் ஆராய்ந்து பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது.அதனை மையப்படுத்தி உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

முத்து நகர் சோளர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத கிரவல் அகழ்வு பணியை நிறுத்திய பிரதியமைச்சர் | Illegal Excavation Of Soil In Trinco

இது இவ்வாறாக இருந்தாலும் முத்து நகர் மக்கள் திருகோணமலை மாவட்ட செயலகம்
தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை தங்கள் விவசாய பூமியை மீட்க பல போராட்டங்களை
நடாத்தி வந்துள்ளனர்.

தற்போது சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய நிலத்தை
மீள பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறே மக்களின் கோரிக்கையாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.