முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் சட்டவிரோத மண் அகழ்வு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

முல்லைத்தீவு (Mullaitivu) விஸ்வமடு நெத்தலி ஆறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களின் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு,பகலாக காணி உரிமையாளரின் அனுமதி இன்றி தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களின் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறை மற்றும் கனியவளப் பிரிவினர் மற்றும் பொது அமைப்புகளுக்கு தெரியப்படுத்தியும் எவருமே இவ்விடயம் தொடர்பாக கண்டுகொள்வதில்லை எனவும் இதன் காரணமாக அப்பாவி விவசாயிகள் பல வழிகளிலும் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

அச்ச நிலை

அத்துடன், நெற்செய்கை மேற்கொள்ளும் பொழுது காட்டு யானையின் தொல்லை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், வயல் அறுவடை முடிந்ததும் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் இதனால், பாரிய அளவில் வயல் நிலங்கள் சீர் செய்வதற்கான பணச் செலவு ஏற்படுகின்றது.

முல்லைத்தீவில் சட்டவிரோத மண் அகழ்வு: கண்டுகொள்ளாத அதிகாரிகள் | Illegal Sand Mining Hurts Mullaitivu Agriculture

இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையங்களிலோ அல்லது வேறு எவரிடமும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் மணல் கொள்ளையர்களினால் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனிமையில் தமது வயல் பகுதிகளுக்கு பார்வையிடுவதற்கு செல்ல முடியாத அச்ச நிலை தோன்றியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய தீர்வுகளை பெற்று விவசாய நிலங்களில் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.