கிளிநொச்சி(Kilinochchi) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீவில் பகுதியில் சட்டத்திற்கு முரணான வகையில் களஞ்சியப்படுத்த பட்டிருந்த ஒரு தொகை மணல் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளது.
மணல் மீட்பு
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நீவில் கிராமத்தில் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் களஞ்சியப் படுத்தப்பட்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் களஞ்சிய படுத்தப்பட்டிருந்த மணலை மீட்டுள்ளதுடன் இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.