முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டின் பொருளாதார நெறுக்கடி: சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டு ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்த அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள நிலைமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் ஜூலி கோசேக் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார தாக்கங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தின் மனிதாபிமான சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுவதற்கு இலங்கை அதிகாரிகள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் ஏனைய சகாக்களுடன் நெருக்கமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புயலினால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அந்த அடிப்படையில் மனித உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக பொருளாதார நடவடிக்கைகளிலும் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெறுக்கடி: சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி அறிவிப்பு | Imf Donors Support Sri Lanka Economy After Cyclone

இலங்கை தற்போது அதன் பங்காளிகளுடன் இணைந்து உடனடி அனர்த்தத்திற்குப் பிந்திய சேத மதிப்பீட்டை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த மதிப்பீடு நிறைவடைந்த பின்னர் பொருளாதார தாக்கங்கள் குறித்த தெளிவு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் உறுதிப்படுத்திய கோசேக், நாட்டின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க IMF அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு 

EFF ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் மீட்சி, மறுசீரமைப்பு மற்றும் தாங்கும் திறன் ஆகியவற்றுக்கு நாங்கள் தொடர்ச்சியாக ஆதரவளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலயலுக்கு முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளும் IMF பணியாளர்களும் ஏற்கனவே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெறுக்கடி: சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி அறிவிப்பு | Imf Donors Support Sri Lanka Economy After Cyclone

அத்தோடு, மீட்புச் செயல்பாட்டில் இலங்கைக்கு மேலும் உதவுவதற்கான மாற்றீடுகளை IMF பணியாளர்கள் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் டிசம்பர் 15 ஆம் திகதி IMF பணிப்பாளர் சபை கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத் தேவைகள் மற்றும் சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எம்மிடம் உள்ளதால் அத்தகவல்கள் இலங்கைக்கு மேலும் உதவக்கூடிய விதம் குறித்து எடுக்கப்படும் இறுதித் தீர்மானங்களுக்கு காரணமாக அமையலாம் எனவும் ஜூலி கோசேக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களுக்கும் அவர் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.