முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொருளாதார ஆபத்தில் இலங்கை: ஐம்.எம்.எப் பிரதிநிதியின் வேண்டுகோள்

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) தெரிவித்துள்ளார்.

எனவே, அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலன் போது  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு மீள்வதற்கான வாய்ப்பை வழங்க இந்த வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவது மிகவும் முக்கியமானது என்றும் ஜூலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார மறுசீரமைப்பு

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர். “கடந்த ஜூன் 12 ஆம் திகதி, எங்களின் நிர்வாகக் குழுவினால் 2024 இலக்கம் IV உறுப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆலோசனை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் (EFF) தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.

பொருளாதார ஆபத்தில் இலங்கை: ஐம்.எம்.எப் பிரதிநிதியின் வேண்டுகோள் | Imf S Position On Sri Lanka S Economy

அதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.வேலைத்திட்டத்தின் செயல்திறன் வலுவாக உள்ளது.

மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்கள் காட்டப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.

பணவீக்கம் குறைந்து வருகிறது.அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் அரச வருமானம் அதிகரித்து வருகிறது.இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது.

எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.