சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு (Sri Lanka) விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அநுராதபுரத்தில் (Anuradhapura) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார முன்னேற்றம்
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் விஜயம் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தூதுக்குழு நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் மதிப்பாய்வை மேற்கொள்ளாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.