சமகாலத்தில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தமது கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கும், அவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கும் மற்றும் ஏனைய சேவைகளுக்காகவும் வரும் மக்கள் பல நாட்களாக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமைந்துள்ள வளாகத்தை சுற்றி கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் துர்நாற்றம்
குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை எனவும், வந்தவர்களில் சிலர் உணவு, பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகளை வீதியின் இருபுறங்களிலும், திணைக்களத்தை சுற்றிலும் வீசிச் செல்வதாகவும் சேவைகளைப் பெற வந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் இருந்து தற்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதற்குக் காரணம், பல நாட்களாக கடவுச்சீட்டு ஏற்பாடு செய்வது போன்ற சேவைகளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், குப்பைத் தொட்டிகளும் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகின்றது.