முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி: ஆய்வில் வெளியான தகவல்!

பாகிஸ்தானில் (Pakistan) கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் 74வீத மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளுக்கு கூட வருமானம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்கள் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாவது கடந்த ஓராண்டு காலத்தில் 14 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நகர்ப்புற பகுதிகளில் பல்ஸ் கொன்சல்டண்ட் என்ற அமைப்பு மக்களின் பொருளாதார சூழல்கள் குறித்து ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

நிதி நெருக்கடி

குறித்த ஆய்வு அறிக்கையில், பாகிஸ்தான் மக்கள் தொகை ஏறக்குறைய 24 கோடியாக உள்ளதுடன், அவர்களில் பலர் செலவுக்கு வழியின்றி தவித்து வரும் சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி: ஆய்வில் வெளியான தகவல்! | Impact Of Economic Crisis On Pakistan

56 சதவீத மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிட்ட பின்னர் சேமிப்பதற்கு முடியாத சூழலில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் அந்த நாட்டில், கடந்த ஆண்டில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருபவர்களின் எண்ணிக்கை 14 சதவீத நகரவாசிகள் என்ற அளவில் அதிகரித்து உள்ளது.

பகுதிநேர வேலை

இதன் விளைவால், நாட்டின் நகர மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர், அவர்கள் பெறும் வருவாயை வைத்து கொண்டு மாத செலவுகளை கூட எதிர்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி: ஆய்வில் வெளியான தகவல்! | Impact Of Economic Crisis On Pakistan

கடந்த ஆண்டு மே மாதத்தில் 60 சதவீதம் என்ற அளவில் இந்த எண்ணிக்கை இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 40 சதவீதத்தினர் நெருங்கியவர்களிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்