கூரைகளின் மேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளின் உரிமையாளர்கள், அவற்றை இன்று பிற்பகல் 3 மணி வரை தாமாக முன்வந்து செயற்பாட்டை நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக மின்சாரக் கட்டமைப்பில் மின்சாரத்திற்கான கேள்வி கணிசமாக குறைவடைந்துள்ளது.
எனவே, தேசிய மின் கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக சூரிய சக்தி தகடுகளை இடைநிறுத்துவது அவசியம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

