கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையிலான எல்லைப் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால், பிரிட்டன் அரசு (UK Foreign, Commonwealth and Development Office), தனது பிரஜைகள் கம்போடியா மற்றும் தாய்லாந்தில் சில பகுதிகள் நோக்கி பயணிப்பதைத் தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கம்போடியா–தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு பகுதிகள், தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு சீர்கேடுகள் காரணமாக அதிக ஆபத்தானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான மோதல் காரணமாக இதுவரை 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிவுறுத்தல்
இந்த நிலையில் ,பிரிட்டன் அரசு, தனது குடிமக்களுக்கு பாதுகாப்பான பகுதிகளிலேயே இருக்குமாறும் அரச உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்நிலைமை, மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்றும், பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.