துப்பாக்கிசூட்டில் காயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வரும் கடற்றொழிலாளரை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம் (5) மேற்கொண்டுள்ளார்.
சிகிச்சை
கடந்த செவ்வாய்க்கிழமை(3) திருக்கடலூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை கடற்
பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் கடல் மைல் தொலைவில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த போது, தாக்குதலுக்கு உள்ளான குச்சவெளி பிரதேச கடற்றெழிலாளர் கடந்த மூன்று
தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையிலே, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று தாக்குதலுக்கு உள்ளானவரின் நலன் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.