நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி
இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருவாய் 5.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த காலப்பகுதியில் பதிவான மொத்த ஏற்றுமதி வருவாய் 5,583.25 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 6.9 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.