இலங்கையின் (Sri Lanka) மாணிக்ககல் அகழ்வு தொழில்துறையின் ஏற்றுமதியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மாணிக்ககல் அகழ்வு தொழில்துறையினருடன் இன்று (03) பல புதிய செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வெளிநாட்டு வருமானம்
இதனடிப்படையில், ஏற்றுமதியை வலுப்படுத்தவும் மற்றும் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அனுமதிப் பத்திரம் தொடர்பிலான சட்டங்களை இலகுபடுத்தவும் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிச் செயற்படவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரத்தினபுரியில் (Ratnapura) புதிய முதலீட்டு வலயம் ஆரம்பித்து இந்த துறையை மேலும் பலப்படுத்துவோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.