வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் விகிதம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு கிடைத்த டொலர்கள்
அந்த வகையில், வெளிநாடுகளில் வீட்டு பணிப்பெண்களாக பணிபுரியும் இலங்கையர்களினால் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் இந்த தொகை நாட்டிற்கு கிடைத்துள்ளது.
கடந்த வருட பதிவு
2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 3.71 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பதிவாகியிருந்தது.
நடப்பாண்டின் ஜூலை மாதத்தில் மாத்திரம் பணவனுப்புதல் 697.3 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.