நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி கொடுப்பனவான 2,500 ரூபாவை 5,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள சுமார் 34,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இதே கொடுப்பனவு கிடைக்குமென விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சவர்க்காரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்கம் தீர்மானம்
நேற்று (09) அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை கடந்த வாரம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காணி ஏல விற்பனையாளர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்: கடுமையாகும் சட்டம்
கலைக்கப்பட்ட பிரான்ஸ் நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |