ரி20 உலக கிண்ண சூப்பர் 8 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா(India) அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஆப்கானிஸ்தான்(Afghanistan) அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று(20) பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா(Rohith Sharma) , விராட் கோலி(Virat Kholi) ஆகியோர் களமிறங்கினர்.
ரோகித் சர்மா 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 20 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்தியா அபார வெற்றி
தொடர்ந்து விராட் கோலி 24 ஓட்டங்களுக்கும் , சிவம் துபே 10ஓட்டங்களுக்கும் எடுத்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் , பரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணி
அதனை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கை அடைய ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் குர்பாஸ் மற்றும் ஸசாய் ஆகியோர் களமிறங்கினர்.
எனினும் இந்திய அணியின் அபார வீச்சால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா(Jasprit Bumrah) மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய , சூப்பர் 8 சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.