ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை செய்துள்ள ரோகித் சர்மா(Rohith Sharma) மோசமான சாதனையொன்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்தியா(India) மற்றும் ஆப்கானிஸ்தான்(Afghanistan) அணிகளுக்கிடையிலான போட்டியின் போட்டியில் ரோகித் சர்மா 8 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலமே இந்த மோசமான சாதனை படைத்துள்ளார்.
ஒரே உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் அணித்தலைவராக அதிக சிக்சர் அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஐசிசி தொடர்கள்
எனினும்,
ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முற்பட்டு பல்வேறு சமயங்களில் வெற்றியை கண்டாலும் சில சமயம் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்து வருகிறார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா,அயர்லாந்துக்கு எதிராக அரை சதம் அடித்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக 13 ஓட்டங்கள், அமெரிக்காவுக்கு எதிராக மூன்று ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 8 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
மோசமான சாதனை
இதன் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஒற்றை இலக்கம் ஓட்டங்களில் ஆட்டம் இழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா ஐசிசி தொடர்களில் இதுவரை 19 முறை ஒற்றை இலக்கம் ஓட்டங்களில் ஆட்டம் இழந்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார்.
யுவராஜ் 17 முறை ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்து இழந்துள்ளார்.
விராட் கோலி 14 முறை ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
தோனி 13 முறையும், சுரேஷ் ரெய்னா 13 முறையும் சச்சின் டெண்டுல்கர் 12 முறையும், ஜாகிர் கான் 12 முறையும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.