முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இறுதிப்போட்டியின் பின் ஓய்வை அறிவித்த விராட் கோலி: சோகத்தில் இரசிகர்கள்

ரி20 டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி வீரர் விராட் கோலி(Virat kholi) அறிவித்துள்ளார்.

தென்ஆபிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2வது உலககிண்ண கோப்பையை நேற்று (29)கைப்பற்றியபோது சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற அவர் இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த போட்டியில், கோலி 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் எடுத்து அணியின் புள்ளியை உயர்த்தினார்.இதுவே தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 7 ஓட்டங்களில் வெற்றி பெற அடித்தளமாக அமைந்தது.

ரி20யில் ஓய்வு

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பின்னர் கோலி, இதுதான் எனது கடைசி ரி20 உலகக்கோப்பை. இதைத் தான் நாங்கள் இதில் அடைய நினைத்தோம்.ஒருநாள் நம்மால் ஓட்டங்களே அடிக்க முடியாது எனத் தோன்றும்.

அதன் பின் இது போன்று (ஓட்டங்கள் குவிப்பது) நடக்கும். கடவுள் அற்புதமானவர்.

virat kholi retirment

சரியான நேரத்தில் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற நிலையில் சிறப்பான செயல்பாடு வெளிப்பட்டது. இதுவே இந்திய அணிக்காக எனது கடைசி ரி20 போட்டி. இதில் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைத்தோம்” 

இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். நாங்கள் தோற்று இருந்தால் நான் இதை அறிவிக்காமல் போயிருக்க மாட்டேன் என்றெல்லாம் இல்லை. அடுத்த தலைமுறைக்கான நேரம் இது. அவர்கள் ரி20 யில் பல அற்புதங்களை செய்வார்கள். நாம் ஐபிஎல் தொடரில் அதை பார்த்து இருக்கிறோம்.” என்றார்.

ஆட்டநாயகன் விருது

2022 ரி20 உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி, ஓராண்டு காலத்துக்கும் மேல் இந்திய ரி20 அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் விராட் கோலி இந்திய ரி20 அணிக்கு திரும்பினார்.

ind vs eng live score

2024 ஐபிஎல் தொடரில் அபார ஆட்டம் ஆடிய அவர், 2024 ரி20 உலகக்கோப்பைக்கான அணியிலும் இடம் பெற்றார்.

தனது கடைசி ரி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஏழு போட்டிகளில் அவர் 75 ஓட்டங்கள் மட்டுமே அடித்து இருந்தார். அரை இறுதி வரை விராட் கோலியால்ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் அவர் 59 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தார். இ

இந்திய அணிக்காக 125 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இதில் 4188 ஓட்டங்கள் அடித்துள்ளார்.

ஒரு சதம், 39 அரை சதங்களை அடித்துள்ளார். ரி20 போட்டிகளில் கோலியின் சராசரி 48.69 எனவும், ஸ்டிரைக் ரேட் 137.04 என உள்ளது.

375 பவுண்டரி, 126 சிக்ஸர்கள் அடித்திருக்கும் அவர், 54 கேட்ச்களை பிடித்துள்ளார். அதேபோல் பவுலிங்கிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.