இந்தியா (India) – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, எயார் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் குறுகிய காலத்தில் சீனாவிற்கு விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2020 இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய இராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியா – சீனா உறவுகள் விரிசல் அடைந்தன.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
இந்நிலையில், இந்தியா மீதான ட்ரம்ப் உடைய 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவையும் சீனாவையும் ஒரே கோட்டில் நிறுத்தியுள்ளன.
இந்த மாத இறுதியில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காக இந்திய பிரதமர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது 2019 க்குப் பிறகு சீனாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.