Courtesy: Sivaa Mayuri
இலங்கையில், தனது நல்லாட்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியமான வழிகளை இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறை பணியாளர் வி.சிறினிவாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பு
அவரின் தலைமையில், குழு ஒன்று 2024 ஜூலை 7-9 வரை மூன்று நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்தது.
இலங்கை சிவில் சேவை அதிகாரிகளின் திறனைக் கட்டியெழுப்புவதற்கான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான செயற்பாட்டு கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் நல்லாட்சி நடைமுறைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த சாத்தியங்கள் குறித்து இந்த குழுவினர் ஆராய்ந்தனர்.
இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஆகியோரை சந்தித்த தூதுக்குழு, ஜனாதிபதியின் செயலாளர் எஸ் பி ஏகநாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரையும் சந்தித்ததமை குறிப்பிடத்தக்கது.