இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திஸாநாயகவின் நகர்வுகள் தொடர்பில் இந்தியா மிக நெருக்கமாக அவதானித்துக் கொண்டிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் அரசியலில் நேரடியாக ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ள பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியினுடைய ஆதரவாளர்கள் பெரும்பாலும் சஜித் பிரேமதாச பக்கம் செல்ல கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் இடதுசாரி, கம்யூனிசம் மற்றும் சோசலிசம் தொடர்பில் அதிகம் கலந்துரையாடல் மேற்கொள்ளாமையே அவரது வெற்றிக்கு காரணம் எனவும் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் கூறியுள்ளார்.